Suriya to be a ‘Kaappaan’ in his 37th movie directed by K V Anand!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு  ‘காப்பான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது!

News 2-Jan-2019 11:22 AM IST Top 10 Comments

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் சூர்யாவின் 37-வது படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி என்று பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான டைட்டில் புத்தண்டன்று வெளியாகும் என்று இயக்குனர் கே.வி.ஆனந்த் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக ‘காப்பான்’, ‘உயிர்கா’, ‘மீட்பான்’ என்று மூன்று டைட்டில்களை இயக்குனர் கே.வி.ஆனந்த் தேர்வு செய்து அதில் எந்த தலைப்பு ‘சூர்யா-37’ படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிவிக்க ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் ‘உயிர்கா’ என்ற டைட்டிலை தேர்வு செய்திருந்தனர். அதனால இந்த படத்திற்கு ‘உயிர்கா’ என்ற டைட்டில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை மீறி படத்திற்கு ‘காப்பான் என்ற டைட்டில் வைக்கப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சூர்யா ‘காப்பான்’ என்ற டைட்டிலுக்கு உரிய விதமாக ஸ்டைலிஷாக, அதிரடி ஆக்‌ஷன் கேரக்டர் ஒன்றில் தோன்றியவாறு அவரது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். ‘காக்க காக்க’ படத்தின் வரசியைல் அதே அர்த்தத்துடன் இந்த ‘காப்பான்’ டைட்டிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...

;