ஒரே நேரத்தில் 4 தமிழ்ப்படங்களின் விழா!

ஒரே நேரத்தில் 4 தமிழ்ப்படங்களின் விழா!

செய்திகள் 25-May-2013 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ராட்டினம்’, ‘சகுனி’, ‘அரவான்’, ‘பாகன்’, ‘வனயுத்தம்’ போன்ற படங்களை வாங்கி வெளியிட்டு அதில் வெற்றியும் கண்ட நிறுவனம் வேந்தர் மூவிஸ். இந்நிறுவனம் தற்போது, ரஜினியின் ‘தில்லு முல்லு’ படத்தினை அதே பெயரில் ரீமேக் செய்து வருகிறது. சிவா, இஷா தல்வார், பிரகாஷ் ராஜ் நடிக்க இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் பத்ரி.

அதேபோல், தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ படத்தையும் வேந்தர் மூவிஸே வாங்கி வெளியிட்டுள்ளது. இதுதவிர, லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’ ஆகிய படங்களையும் வேந்தர் மூவிஸ் எஸ.மதன் வாங்கி வெளியிடுகிறார்.

தற்போது, இந்த நான்கு படங்களின் விழாக்களையும், அதாவது ‘தில்லு முல்லு’, ‘சுட்ட கதை’, ‘நளனும் நந்தினியும்’ ஆகிய படங்களின் இசை வெளியீட்டையும், ‘எதிர்நீச்சல்’ படத்தின் வெற்றி விழாவையும் ஒரே மேடையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நான்கு விழாக்களையும் ஜெனீவாவில் உள்ள ராணி எலிசபெத்தின் விக்டோரியா ஹாலில் வரும் ஜூன் 1ம் தேதி நடத்த இருக்கிறார்கள்.

ஜெனீவாவில் நடைபெற இருக்கும் இந்த பிரம்மாண்டமான விழாவில், சிறப்பு விருந்தினராக பாரி வேந்தர் கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இத்தாலிய நடனக் கலைஞர்கள் பங்குபெறும் நடன நிகழ்ச்சி ஒன்றும் அரங்கேற உள்ளது. அதைத் தொடர்ந்து புகழ்பெற்ற பாடகர்களான எஸ்.பி.பி.சரண், நரேஷ் ஐயர், பாப் ஷாலினி, விஜய் பிரகாஷ் ஆகியோர் பாடல்களையும் பாட உள்ளனர்.விழா ஏற்பாடுகள் அனைத்தும் வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆயா வட சுட்ட கதை


;