ஹீரோவான விஜய்யின் ரசிகர்!

ஹீரோவான விஜய்யின் ரசிகர்!

செய்திகள் 24-Jun-2013 11:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கார்த்திக் நடித்த ‘தை பொறந்தாச்சு’, பிரபு நடித்த ‘சூப்பர்குடும்பம்’, விஜயகாந்த் நடித்த ‘எங்கள்ஆசான்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர்.கே.கலைமணி, தற்போது ‘ஆப்பிள் பெண்ணே’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஆர்.கே.கலைமணி கூறியபோது... ‘‘இன்றைய இளைய தலைமுறையினருக்கு அம்மா, அப்பாவைப்பற்றிய பாசம், புரிதல் குறைவாகவே உள்ளது. பெற்றோர்களின் நியாயமான பாசம்கூட அவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது.

அம்மா, அப்பாவின் அணுகுமுறையை தவறாகப்புரிந்து கொண்டு வீட்டைவிட்டு ஓடிப்போகிற இன்றைய தலைமுறையினரைப் பற்றிய படமே ‘ஆப்பிள் பெண்ணே’. ரோஜா நடத்தும் ஓட்டல் ஒன்றை சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் குற்றாலத்தில் தத்ரூபமான ‘செட்’ போட்டு படப்பிடிப்பை நடத்தினோம். அம்மா, மகள் பாசத்தை மையப்படுத்தி காதலை புதுமாதிரியான விதத்தில் சொல்லி இருக்கிறோம்.

சாலக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்,” என்றார். இந்தப் படத்தின் கதாநாயகன் வத்சன், ‘இளையதளபதி’ விஜய்க்கு ரசிகர் என்பதால் தனக்கு படம் ஒப்பந்தமானவுடன் விஜய்யிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்ற பிறகே நடிக்கச் சென்றாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காளி முதல் 7 நிமிடங்கள்


;