மூன்று மொழி பேசும் சலீம்!

மூன்று மொழி பேசும் சலீம்!

செய்திகள் 2-Aug-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘சலீம்’. ‘ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யும் திட்டத்தோடு படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். ‘சலீம்’ குறித்து விஜய் ஆண்டனி, ‘’படத்தின் ஐம்பது சதவிகித டாக்கி போர்ஷன் வேலைகள் முடிந்துவிட்டது.

எடுத்த வரைக்கும் படம் நல்லா வந்திருக்கிறது. மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சலீம் நல்ல ஒரு படமாக வெளிவரும்’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக அக்‌ஷா பர்தசானி நடிக்க,

படத்திற்கு விஜய் ஆன்டனியே இசை அமைக்கிறார் என்று நாம் சொல்லியா தெரிய வேண்டும்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;