'பிரியாணி’ சுவாரஸ்யமான த்ரில்லர்! - கார்த்தி

 'பிரியாணி’  சுவாரஸ்யமான த்ரில்லர்! -  கார்த்தி

செய்திகள் 5-Dec-2013 10:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் வித்தியாசமாக நடித்து வெற்றிபெற்ற ‘மங்காத்தா’ படத்துக்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி, ராம்கி நடித்துள்ள படம், ‘பிரியாணி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள 100வது படம் இது. வருகிற 20-ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர் ‘பிரியாணி’ படக்குழுவினர்.

இந்த சந்திப்பின்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “பிரியாணி ஆரம்பித்தபோதே கார்த்தியின் முந்தைய தோற்றம் இருக்ககூடாது, புதுசா மாத்தணும்னு நானும், வாசுகி பாஸ்கரும் சேர்ந்து முடிவு செஞ்சோம். ஹேர் ஸ்டைல், காண்டாக்ட் லென்ஸ், ட்ரெஸ் என ஒரு ப்ளே பாய்க்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் மாத்தினோம். ராம்கி சார் மீண்டும் நடிக்க வந்து இதுல நாசர் சாரோட மகனா நடிச்சிருக்கார். அவர் ரோல் பத்தி விரிவாக இப்போ சொல்ல முடியாது. ஹன்சிகா, மாண்டி தாக்கர்னு ரெண்டு ஹீரோயின். மாண்டி தாக்கர் கதையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடிச்சிருக்காங்க. அங்க இருந்து தான் படத்தோட விறுவிறுப்பு கூடும்’’என்ற வெங்கட் பிரபுவிடம் படத்துக்கு சென்சாரில் ‘U/A’ சர்டிஃபிக்கெட் கொடுக்க என்ன காரணம் என்று கேட்டதற்கு, “ படத்தில் வன்முறை காட்சிகள் கொஞ்சம் கூட கிடையாது. படத்தில் சில காட்சிகள் வயது வந்தோர் மட்டும் பார்க்கும்படி அதாவது, பார்ட்டி, சரக்கடிப்பது, பெண்களை கரெக்ட் பண்ணுவது போல உள்ளதால், படத்துக்கு U/A சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக்குழு. எப்படியும் ‘U’ சான்றிதழ் வாங்கிருவோம்” என்றார்.

கார்த்தி பேசும்போது: “பையா’வுக்கு பிறகு ஏன் மாடர்ன் லுக்கில் நடிக்கலேன்னு கேட்டுகிட்டே இருக்காங்க, அந்த மாதிரி ரோல் அமையல, அவ்வளவுதான். அப்புறம் கிடைச்ச படம் தான், ‘பிரியாணி’. என் கேரியரில் நான் மிகவும் ரசித்து நடித்த படம். இது முழுக்க வெங்கட் பிரபு படம்தான். நான், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.

‘பிரியாணி’யில் ( பாடி லாங்வேஜ் ) பொண்ணுங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு கத்து கொடுத்தார் வெங்கட் பிரபு. வழக்கமா வர மாதிரி படத்துல காதல்-ல ஆரம்பிக்காம பிரேக்-அப்-ல தான் படம் ஆரம்பிக்கும். ஹன்சிகா ரொம்ப கம்ஃபர்டபுலான நடிகை. படப்பிடிப்பு வேளையில் எந்தவித பதற்றமுமின்றி உற்சாகத்துடன் நடித்துள்ளார். மேலும் மாண்டி தாக்கர் என்ற பஞ்சாப் நடிகை படத்தில் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். இவர் வசனங்களை மனப்பாடம் செய்து நடித்த விதம் எல்லோரையும் வியப்படைய வைத்துள்ளது. ராம்கி சாரோட தீவிரமான ஃபேன் நான். அவருடைய ரசிகனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.

யுவனுக்கு ‘பிரியாணி’ 100-வது படம். என் அப்பாவோட முதல் படத்துக்கு இளையராஜா சார் இசை, என் முதல் படத்துக்கு யுவன் இசை. இப்போ யுவனோட 1௦௦வது படத்துல நான் நடித்திருக்கிறேன். ரொம்ப பெருமையா இருக்கு. அவரது பங்களிப்பும் உழைப்பும் படத்துக்கு பெரிய ப்ளஸ். எல்லோரையும் ஈர்க்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக ‘பிரியாணி’ அமையும்.” என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;