பாலா வெளியிட்ட அஜித் ரகசியம்!

பாலா வெளியிட்ட அஜித் ரகசியம்!

செய்திகள் 16-Jan-2014 10:42 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில், 'அன்பு' படத்தில் அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தவர் பாலா. பின்னர் மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பாலா. இவர் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'வீரம்' படத்தை இயக்கிய இயக்குனர் சிவாவின் தம்பி ஆவார்! அண்ணன் ஹைதராபாத்திலும், தம்பி கேரளாவிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளனர். இவர்கள இருவரும் முதன் முதலாக இணைந்து பணியாற்றிய படம் 'வீரம்’. இப்படத்தில் நடந்த சுவையான விஷயத்தை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் பாலா. ‘‘அஜித் சார் படத்தில் நடித்தது மறக்க முடியாத விஷயம். ‘வீரம்’ படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் அஜித் சார், அண்ணன் சிவா, நான் உட்பட எல்லோரும் பேசிக்கொண்டிருந்தோம் அப்போது அஜித் சார் அவருடைய உதவியாளர்கள் அனைவருக்கும் தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்ததை குறித்து பேசும்போது அவரிடம், இதற்கு பெருமளவில் செலவு ஆகியிருக்குமே என கேட்டபோது அவர், ‘‘ நம்மளை சுற்றியிருப்பவர்களை நாம் பார்த்துகொண்டால் ஆண்டவன் நம்மளை பார்த்துக் கொள்வான்’’ என்றார்! உடனே சிவா அண்னன், ‘‘ சார் இதை படத்தில் வைத்துக்கொள்ளலாம்’’ என்று சொல்லிதான் அந்த வசனத்தை படத்தில் வைத்தார். இதை நான் சொல்வது அஜித் சாருக்கு பிடிக்காது! இருந்தாலும் அவர் மேல் உள்ள அன்பினால் சொல்கிறேன்’’ என்றவர்,
‘ ‘‘மலையாளத்தில் திறமைய மதிகின்றனர், அதனால் தான் நான் அங்கு தொடர்ந்து நடித்து வருகிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வர்மா டீஸர்


;