படமாகும் மோடியின் வாழ்க்கை!

படமாகும் மோடியின் வாழ்க்கை!

செய்திகள் 25-Jan-2014 12:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஷெர்லின் சோப்ரா நடிப்பில், ‘காமசூத்ரா 3டி’ படத்தை இயக்கியவர் கேரளாவை சேர்ந்த ரூபேஷ் பால்! விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தை தொடர்ந்து ‘நமோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ரூபேஷ் பால்! இந்தப் படம், ‘4டி’ தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாகிறது. குஜராத் முதல்வரும், பி.ஜே.பி.கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்படுகிறது.

இந்திய அரசியலில் தற்போது சிறந்து விளங்கி வரும் மோடியின் அரசியல் தந்திரங்களை சித்தரிக்கப்படவிருக்கும் இப்படத்தில் ‘ஒரு டாலர் ஒரு இந்தியன் ரூபாய்க்கு சமம்’ என்ற கருத்தையும் வலியுறுத்த இருக்கிறார்கள்! அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் வெளியிடும் திட்டத்தோடு இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள்! சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியானது! அமெரிக்காவில் தொழில் அதிபராக இருக்கும் இந்தியாவை சேர்ந்த மிதேஷ் பட்டேல் என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார். கேரளாவை சேர்ந்த சோஹன் ராய் தயாரிப்பு ஒருங்கிணைப்பை செய்கிறார்.

நரேந்திர மோடி பாத்திரத்தில் பரேஷ் ராவல் நடிக்க இருக்கிறார். படத்தின் மற்ற கேரக்டர்களுக்கான நடிகர் – நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்று குஜராத்தை ஆளும் முதல் மந்திரியாக, பிரதமர் வேட்பாளராக திகழும் மோடியை குறித்து ‘சமாஜிக் சமஸ்தா’ என்ற பெயரில் புத்தகமாக எழுதியவர்களில் ஒருவரான மிஹிர் பூட்டோ தான் ‘நமோ’வின் திரைக்கதை ஆசிரியர்.

’4டி’ தொழிநுட்பத்தில் உருவாகும் முதல் இந்திய திரைப்படம் ‘நமோ’ என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - யவனா வீடியோ சாங்


;