விஜய்யிடம் கதை சொன்னது உண்மை! - சமுத்திரக்கனி

Samuthirakani next with vijay

செய்திகள் 18-Mar-2014 12:57 PM IST RM கருத்துக்கள்

'நிமிர்ந்து நில்' படத்தின் வெற்றிவிழா பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய சமுத்திரக்கனி, ''இப்படம் மூலம் எனக்கு பல முக்கிய பிரமுகர்கள் நண்பர்களாகி வருகின்றனர். மேலும் சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் தேவாரம் ஆகியோர் படம் பார்த்துவிட்டு என்னை பாராட்டியதை மறக்கமுடியாது.

படத்தின் இரண்டாம் பாதியில் ஏன் கமர்ஷியல் விஷயங்களை சேர்த்தீர்கள் என சிலர் கேட்டனர். எனது எல்லா படங்களிலும் முதல் பாதியிலேயே கதையை அழுத்தம் கொடுத்து சொல்லி விடுவேன். அதற்கு பிறகு, காமெடி மற்ற அம்சங்கள் இருக்கும். ‘நிமிர்ந்து நில்’ படத்தை பொறுத்தவரையில் இரண்டாம் பகுதியை அதிகம் ரசித்துள்ளனர். நான் தேனி சென்றிருந்தபோது பலருக்கு படத்தின் இரண்டாம் பகுதி பிடித்ததாக கூறினர்’’ என்ற சமுத்திரக்கனியிடம், ‘‘விஜய் படத்தை எப்போது இயக்குகிறீர்கள்?’’ என கேட்டபோது, ‘‘விஜய்யிடம் கதை சொன்னது உண்மை! நான் சொன்ன கதை அவருக்கும் பிடித்திருக்கிறது! கடைசிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உறுதியான பின் அதுபற்றி அறிவிக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்டங்கரன் வீடியோ பாடல் - Sarkar


;