ராஜாவைக் கொண்டாடிய தெலுங்கு சினிமா!

Ulavacharu Biryani Audio Launch

செய்திகள் 1-Apr-2014 3:06 PM IST Chandru கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கும் ‘உன் சமையலறையில்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘உலவச்சாரு பிரியாணி’யின் இசைவெளியீடு யுகாதித் திருநாளான நேற்று மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. தனது உடல்நிலை காரணமாக கடைசி நேரத்தில் விழாவிற்கு வந்த இசைஞானி இளையராஜாவிற்கு யுகாதித் திருநாள் சம்பிரதாயங்களோடு தெய்வீக வரவேற்பு அளிக்கப்பட்டது. தனக்குக் கொடுக்கப்பட்ட இந்த திடீர் வரவேற்பால் ராஜா மேடையில் மிகவும் நெகிழ்ச்சியோடு காணப்பட்டார்.

இப்படத்தின் கன்னட பதிப்பிற்கான இசைவெளியீட்டை கடந்த 29ஆம் தேதி நடத்தி முடித்துவிட்டார் பிரகாஷ்ராஜ். ‘உன் சமையலறையில்’ தமிழ் பதிப்பிற்கான இசைவெளியீடு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘சால்ட் அன்ட் பெப்பரி’ன் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் பிரகாஷ் ராஜுடன் சினேகாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

60 வயது மாநிறம் ட்ரைலர்


;