‘கோச்சடையான்’ முன் பதிவு திடீர் நிறுத்தம்!

‘கோச்சடையான்’ முன் பதிவு திடீர் நிறுத்தம்!

செய்திகள் 7-May-2014 5:16 PM IST VRC கருத்துக்கள்

பரபரப்பாக முன் பதிவு செய்யப்பட்டு வந்த ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் முன் பதிவு தற்போது சென்னையில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் நிறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக சென்னையிலுள்ள ஒரு சில தியேட்டர்களில் விசாரித்தபோது ‘கோச்சடையான்’ பட வெளியீட்டில் ஒரு சில குழப்பங்கள் இருப்பதால் தற்காலிகமாக படத்திற்கான முன் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இது குறித்து தெளிவான ஒரு முடிவு கிடைக்கும் என்றார்கள்! இதனால் ‘கோச்சடையான்’ படம் குறிப்பிட்டபடி வரும் வெள்ளிக் கிழமை வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விரைவில் இந்த குழப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 . 0 டீஸர்


;