’அட்டகத்தி’ தினேஷின் திருடன் போலீஸ்!

’அட்டகத்தி’ தினேஷின் திருடன் போலீஸ்!

செய்திகள் 24-Jun-2014 10:58 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரையுலகில் மாறுபட்ட சில வெற்றி படங்களை தயாரித்து வழங்கிய எஸ்.பி. பி. சரண் , ஜே . செல்வகுமாருடன் இணைந்து வழங்கும் படம் 'திருடன் போலீஸ்'. பால்ய பருவத்தில் இருந்தே ஓட, விரட்ட என்று பழக்கப்பட்ட கதையை புதுமைப்படுத்தி, பல்வேறு கதாபாத்திரங்களின் துணையோடு நகைச்சுவை கலந்து ‘திருடன் போலீஸ்' படத்தை தயாரித்துள்ளனராம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளி வரும் தருவாயில் உள்ளது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் பிரசித்தி பெற்ற கார்த்திக் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில், ‘அட்ட கத்தி' தினேஷ் கதாநாயகனாக நடிக்க , அவருக்கு இணையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். நிதின் சத்யா,பால சரவணன், ' நான் கடவுள்' ராஜேந்திரன் , ஜான் விஜய், ஆகிய நால்வரும் இந்த கதையை தாங்கி பிடிக்கும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனராம்! புதிய முயற்சிகளுக்கு எப்போதுமே உறுதுணையாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் உருவாகி இருக்கும் ' திருடன் போலீஸ்' அடுத்த மாத இறுதியில் வெளி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை டீஸர்


;