ஏ.ஆர்.ரெஹ்னா இசை அமைக்கும் ‘இது நம்ம சென்னை’

ஏ.ஆர்.ரெஹ்னா இசை அமைக்கும் ‘இது நம்ம சென்னை’

செய்திகள் 8-Jul-2014 4:03 PM IST VRC கருத்துக்கள்

‘ஆஸ்கார் விருது’ பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமூக சேவைகளிலும் ஈடுபாடு கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரைப் போலவே அவரது சகோதரியும், இசை அமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹ்னாவும் சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். அரவிந்த் ஜெயபால் என்பவர் தலைமையில் சென்னையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் ‘ரெயின் டிராப்ஸ்’. இந்த தொண்டு நிறுவனத்தின் பிரான்ட் அம்பாசிடராக ஏ.ஆர்.ரெஹ்னா இருந்து வருகிறார். இந்த நிறுவனம், சென்னை மக்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் ‘இது நம்ம சென்னை’ என்ற பெயரில் ஒரு ஆல்பத்தை தயாரிக்கிறது. இந்த ஆல்பத்திற்கு ஏ.ஆர்.ரெஹ்னா இசை அமைக்கிறார். ஒரு பிரபல பின்னணி பாடகர் பாட இருக்கிறார். இந்த ஆல்பத்தை பிரம்மாண்டமான முறையில் விழா ஒன்றை நடத்தி வெளியிட இருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செக்க சிவந்த வானம் ட்ரைலர்


;