ரசிகர்களைத் தாக்க வரும் ஹாலிவுட் ‘சூறாவளி’

ரசிகர்களைத் தாக்க வரும் ஹாலிவுட் ‘சூறாவளி’

செய்திகள் 30-Jul-2014 11:49 AM IST Chandru கருத்துக்கள்

இயற்கை அன்னை கோபம் கொண்டால், அதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படி சூறாவளிக் காற்று, சீறி பாய்வதால் விளைவிகளை பற்றி சொல்லவும் வேண்டுமா? வார்னர் பிராஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஹாலிவுட் படம் ‘இன் டு தி ஸ்டோர்ம்’. 3டியில் உருவாகியிருக்கும் இப்படம் தமிழிலும் வெளியாகிறது.

சில்வர்டன் எனும் ஓர் அழகிய சிறிய நகரத்தில் எப்பொழுதும்போல் பொழுது விடிகிறது. ஆனால் திடீரென ஒரு புயல் உருவாகி, பெரும் வேகத்தில் சுழன்று சுழன்று அடித்து சூறாவளியாக மாறி மக்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறது! தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள, திசை தெரியாமல் ஓட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. சீறி வரும் புயலின் தாக்கத்தை, அவர்களால் தாக்கு பிடிக்க முடிந்ததா? இல்லையா? என்பதே மீதி கதை.

John Swetnam திரைக்கதையை அமைத்திட, Steven Quale படத்தை இயக்கியுள்ளார். Richard Armitage, Sarah Wayne Callies, Matt Walsh என, இதர பலரும் இதில் நடித்துள்ளனர்! Brian Tyler இசை அமைக்க, Brian Pearson ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;