முன்னோட்டம் : சலீம்

முன்னோட்டம் : சலீம்

முன்னோட்டம் 27-Aug-2014 11:24 AM IST Top 10 கருத்துக்கள்

‘நான்’ தந்த வெற்றியில் உற்சாகமாக ‘சலீம்’ ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக களமிறங்கியிருக்கும் விஜய் ஆண்டனி. ‘நான்’ படத்தில், இவர் நடித்த ‘சலீம்’ என்ற கேரக்டரின் பெயரையே இப்படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். அதோடு, ‘நான்’ படத்தின் தீம் மியூசிக்கையும் இந்த ‘சலீமி’ல் பயன்படுத்தியிருப்பதால், இப்படம் ‘நான்’ படத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம் எனவும் கூறுகிறார்கள். பாரதிராஜாவிடம் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த என்.வி.நிர்மல் குமார் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பொரேஷன், ஸ்டுடியோ 9, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. எம்.சி.கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘சலீம்’ படத்தின் இசையை விஜய் ஆண்டனியே கவனித்திருக்கிறார். ‘உன்னை கண்ட நாள்முதல்...’, ‘மஸ்காரா பொட்டு...’ ஆகிய பாடல்கள் ஹிட் ரகம்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அக்ஷா பர்தசானி நடித்திருக்கும் இப்படத்தில் பிரேம்ஜி அமரனும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். ‘சலீம்’ என்ற டாக்டராக இப்படத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, ஆக்ஷன் காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு மாத காலம் டேக்வோன்டோ தற்காப்புக்கலைப் பயிற்சியை மேற்கொண்டாராம்.

‘நான்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் ‘இரும்பு குதிரை’ படத்திற்கு இணையாக இப்படத்திற்கும் முக்கிய தியேட்டர்களும், காட்சிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘சலீம்’ ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;