‘ஜீவா’வில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்!

‘ஜீவா’வில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்!

செய்திகள் 12-Sep-2014 9:28 AM IST VRC கருத்துக்கள்

‘பாண்டிய நாடு’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜீவா’. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் நடிக்க ‘தி நெக்ஸ்ட் பிக் ஃபிலிம்’ நிறுவனத்துடன் இணைந்து சுசீந்திரனின் ‘வெண்ணிலா கபடி டீம்’ தயாரித்திருக்கிறது. இப்படத்தை நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனமும், நடிகர் விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.

இந்த படத்துடன் இணைந்துள்ளது பற்றி விஷால் கூறும்போது, ‘‘கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதையைக் கேட்டதும் இதில் நானும் இணையவேண்டும் என்று விரும்பினேன். இதுவரை யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். தரமான ஒரு படைப்பாக ‘ஜீவா’ வந்துள்ளது. இந்த படைப்பில் எனது பெயரும் பதியவேண்டும் என்பதாலேயே இப்பட தயாரிப்பில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்! மற்றபடி வியாபாரம், பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் இல்லை’’ என்று ‘ஜீவா’வுக்கு தர சான்றிதழ் தருகிறார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை ட்ரைலர்


;