‘அரண்மனை’ - ஒரு ‘திக்.. திக்...’ முன்னோட்டம்

‘அரண்மனை’ - ஒரு ‘திக்.. திக்...’ முன்னோட்டம்

முன்னோட்டம் 17-Sep-2014 12:49 PM IST Chandru கருத்துக்கள்

குறைந்த பட்ஜெட்டில் ஒரு வெற்றியைக் கொடுக்க வேண்டும் என நினைக்கும் இயக்குனர்களுக்கு முதலில் தோன்றுவது திகில் படம் ஒன்றை எடுக்கலாம் என்பதுதான். தவிர, இப்போது கோலிவுட்டில் ‘டிரன்ட்’டே பேய்ப் படங்கள்தான். ‘பீட்சா’வில் ஆரம்பித்த இந்த கான்செப்ட் லேட்டஸ்ட் ஹிட்டான ‘யாமிருக்க பயமே’ வரை எதிரொலித்தது. காமெடிக்கு கேரன்டி இயக்குனரான சுந்தர்.சியும் இப்போது ‘அரண்மனை’ மூலம் இந்த டிரென்டுக்குள் வந்திருக்கிறார். இப்படம் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்...

* இப்படத்தில் இயக்குனர் சுந்தர்.சியுடன் இணைந்து வினய், ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, ஆன்ட்ரியா, சந்தானம், கோவை சரளா, நிதின் சத்யா, மனோபாலா, சரவணன், கோட்டா ஸ்ரீனிவாச ராவ், சித்ரா லக்ஷ்மணன், மறைந்த நடிகர் ‘காதல்’ தண்டபாணி உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

* பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்க, எடிட்டிங்கை கவனித்திருப்பவர் ஸ்ரீகாந்த். தயாரிப்பு விஷன் ஐ மீடியாஸ்.

* ‘அரண்மனை’ என்ற டைட்டிலுக்கு ஏற்ப ஒரு பெரிய அரண்மனையில் நடக்கும் மர்மமான சம்பவங்களும், அதில் பாதிக்கப்படுவர்களை பற்றியும்தான் இப்படம் பேசவிருக்கிறது. சமீபத்தில் வெளியான இதன் டிரைலர் ‘சந்திரமுகி’யை சில இடங்களில் ஞாபகப்படுத்தியிருந்தாலும், ரசிக்க வைத்தது.

* இப்படத்திற்காக ஒன்றரை கோடி ரூபாய் செலவில் நிஜமான அரண்மனை போன்ற தோன்ற கொண்ட செட் ஒன்று ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் உருவாக்கப்பட்டு, அங்கு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் சுந்தர்.சி. மிகக்குறைந்த நாட்களிலேயே இப்படம் படமாக்கப்பட்டு, சமீபத்தில் இதன் ஆடியோ விழாவையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

* இதுவரை தனக்கு அமைந்த கேரக்டர்களிலேயே ‘அரண்மனை’ படத்தின் கேரக்டர்தான் வித்தியாசமானது என குறிப்பிட்டிருக்கிறார் ஹன்சிகா. படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் ஹன்சிகா, முக்கிய திருப்புமுனையையும் ‘அரண்மனை’யில் ஏற்படுத்துவாராம். இவரோடு ராய் லக்ஷ்மி, ஆன்ட்ரியா என ‘கிளாமர் குயின்’களும் படத்தில் இருப்பதால் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இது இருக்கும் என்கிறார் சுந்தர்.சி.

* சிரிக்க வைப்பதற்கு சந்தானம், கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட நடிகர்கள் கேரன்டியாம். அவர்கள் அடிக்கும் லூட்டிகளால் படம் முழுக்க ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கலாம் என்கிறார்கள். திகலும், காமெடியும் சரிவிகிதத்தில் கலந்த கலவையாம் இந்த ‘அரண்மனை’.

‘அரண்மனை’க்கு திகில் ‘விசிட்’ அடிக்க தயாரா ரசிகர்களே...

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;