நவம்பர் 9-ல் குடும்பத்தலைவராகும் இயக்குனர் அட்லி!

நவம்பர் 9-ல் குடும்பத்தலைவராகும் இயக்குனர் அட்லி!

செய்திகள் 4-Nov-2014 3:46 PM IST Chandru கருத்துக்கள்

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிரடியாக இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லி. ஒரே படத்தின் மூலம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இந்த 27 வயது இளைஞருக்கு, ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்த கிருஷ்ண ப்ரியாவுடன் காதல் மலர்ந்தது. தங்களது எண்ணங்களை முறைப்படி பெற்றோரிடம் தெரிவித்து, சம்மதமும் வாங்கிய இந்த ஜோடிக்கு செப்டம்பர் 7ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

வருகிற 9ஆம் தேதி அட்லி - ப்ரியாவின் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்று மாலை சென்னை ஹயாத் ஹோட்டலில் திருமண வரவேற்பும் நடைபெறவிருக்கிறது.

திருமணம் முடிந்த கையோடு விஜய்யின் அடுத்த பட கதையின் டிஸ்கஷனில் களமிறங்கிவிருக்கிறாராம் அட்லி.

குடும்பத்தலைவராக பொறுப்பேற்கும் அட்லிக்கு ‘டாப் 10 சினிமா’ சார்பாக அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாஃபியா - டீஸர்


;