மலேசியாவில் விஜயகாந்தின் ‘சகாப்தம்’

மலேசியாவில் விஜயகாந்தின் ‘சகாப்தம்’

செய்திகள் 11-Nov-2014 4:54 PM IST VRC கருத்துக்கள்

விஜயகாந்த் நடித்த ‘வல்லரசு’, ‘நரசிம்மா’, ‘சுதேசி’, ‘விருதகிரி’ உட்பட பல படங்களை தயாரித்த எல்.கே.சுதீஷ் தற்போது தயாரித்து வரும் படம் ‘சகாப்தம்’ இப்படத்தில் விஜயகாந்தின் இளைய மகண் சண்முகபாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார்.

அதிக பொருட் செலவில் தயாராகி வரும் இப்படத்தை சுரேந்தர் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகிகளாக மிஸ் இந்தியா பட்டம் பெற்ற நேகாவும், மிஸ் பெங்களூர் அழகியாக பட்டம் பெற்ற சுப்ரா ஐயப்பாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சுரேஷ், ‘தலைவாசல்’ விஜய், சிங்கம் புலி, ஜெகன், டாக்டர் சீனிவாசன், தேவயானி, ரஞ்சித், ராஜேந்திரநாத், சண்முகராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பொள்ளாச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பிற்காக ‘சகாப்தம்’ படக் குழுவினர் வெளிநாடு சென்றுள்ளனர். மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், லங்காவி மற்றும் பேங்காங்கிலும் கிட்டத்தட்ட 35 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது. கார்த்திக் ராஜ இசை அமைக்கும் இப்படத்திற்காக நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். வெளிநாட்டு படப்பிடிப்புடன் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து விடுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;