‘கத்தி’யின் தெறி வெற்றி... ‘பூஜை’யின் மாபெரும் வெற்றி!

‘கத்தி’யின் தெறி வெற்றி... ‘பூஜை’யின் மாபெரும் வெற்றி!

செய்திகள் 10-Dec-2014 9:49 AM IST Chandru கருத்துக்கள்

‘துப்பாக்கி’ டீமின் அடுத்த படத்திற்கும் இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அக்டோபர் 22ஆம் தேதி தீபாவளி வெளியீடாக வந்த ‘கத்தி’ படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைத்தது. முதல் நாளில் மட்டுமே 23 கோடி ரூபாயை உலகமெங்கும் வசூல் செய்ததாக முருகதாஸ் அறிவித்தார். அதோடு குறைந்த நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர். இப்படம் தற்போது 50 நாட்கள் ஆன நிலையிலும் இன்னும் தமிழகத்தின் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் ‘கத்தி’யின் வெற்றியை ‘தெறி’ வெற்றி என கொண்டாடி வருகிறார்கள். ட்விட்டரிலும் டிரென்ட் செய்து வருகிறார்கள்.

‘கத்தி’ படத்துடன் வெளியான விஷாலின் ‘பூஜை’ படத்திற்கும் படக்குழு எதிர்பார்த்தைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹரியின் பரபர திரைக்கதை, விஷாலின் அதிரடி ஆக்ஷன், ஸ்ருதியின் கிளாமர், பெண்களைக் கவரும் சென்டிமென்ட் என ஒரு ‘கமர்ஷியல் பேக்கேஜ்’ஜோடு வெளிவந்த பூஜைக்கு ‘ஏ’ சென்டரைவிட ‘பி’ மற்றும் ‘சி’ சென்டர்களில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதோடு தெலுங்கில் இப்படம் சூப்பர்ஹிட் ஆகியிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இப்படமும் தற்போது 50 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த தீபாவளியைப் பொறுத்தவரை வெளியான ரெண்டு படங்களுமே தியேட்டர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ‘லாபம்’ சம்பாதித்துக் கொடுத்திருப்பதாகவே கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

லைப் ஆப் ராம் வீடியோ பாடல் - 96


;