சேரன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையாம்!

சேரன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையாம்!

செய்திகள் 12-Jan-2015 10:46 AM IST Chandru கருத்துக்கள்

பொங்கலை முன்னிட்டு 15ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சேரனின் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கலை மனதில் கொண்டும், திருட்டு விசிடியை ஒழிக்கும் நோக்கத்தோடும் இயக்குனர் சேரன் ‘C2H’ (Cinema to Home) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனம் மூலம் படம் தியேட்டரில் வெளியாகும் அதேநாளில், டிவிடியிலும் ஒரிஜினலாக ரிலீஸ் செய்யப்படும். 50 ரூபாய் மதிப்பு கொண்ட இந்த டிவிடியை தமிழகத்தின் பல இடங்களிலும் உள்ள ‘C2H’ விநியோகிப்பாளர்களிடமிருந்து ரசிகர்களே நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் வரும் பொங்கலன்று சேரனின் ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் வெளியிடப்போவதாக ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர் சேரன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், ‘‘C2H-ல் வெளியாகும் படங்கள் தியேட்டரிலும் வெளியிடப்படும் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தோம். தற்போது திரைப்படத்துறையின் சூழலைப் புரிந்துகொண்ட திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பேசி முடிவெடுக்க முன்வந்திருக்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை ஏற்று, எல்லோரின் நன்மைகளையும் கருதி அவர்களோடு பேசி முடிவெடுத்த பின் C2H தங்களின் முதல் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது. ஜனவரி 15ம் தேதி வெளியிடுவதாக இருந்த முயற்சியை ஒத்தி வைத்திருக்கிறோம்.’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

C2H பற்றி சினிமா பிரபலங்கள் - வீடியோ


;