விக்ரம் படத்தில் ‘இந்திய சினிமாவையே கலங்கடித்த’ சம்பூர்னேஷ் பாபு!

விக்ரம் படத்தில் ‘இந்திய சினிமாவையே கலங்கடித்த’ சம்பூர்னேஷ் பாபு!

செய்திகள் 4-Feb-2015 9:01 AM IST Chandru கருத்துக்கள்

‘‘சம்பூ.....’’ என்ற இந்த ஒரு வார்த்தையை தெலுங்கு சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல மொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எக்காலத்திலும் மறக்க முடியாமல் செய்திருக்கிறார் சம்பூர்னேஷ் பாபு. ‘‘யார்ரா.... இவர்?’’ என சம்பூ பற்றித் தெரியாமல் புருவம் உயர்த்தும் ரசிகர்களுக்காக மட்டும் அவர் நடித்த ‘ஹ்ருதய கலேயம்’ படத்தின் ஒரு காட்சியின் சாம்பிள் இங்கே...

வில்லன்களால் அடித்து துவைக்கப்பட்டு, முதுகில் மிகப்பெரிய கோடாரி ஒன்றால் வெட்டப்பட்டு இறந்து போகும் ஹீரோ சம்பூர்னேஷை சிதையில் எரிக்கும்போது.... ஹீரோயினை வில்லன்கள் டார்ச்சர் செய்ய, அவர் ‘‘சம்பூ....’’ என கத்துவார். அந்த ஒலி நேரடியாக எரிந்து கொண்டிருக்கும் சம்பூர்னேஷின் காதுகளுக்குள் புகுந்து இதயத்தை அடைந்து மீண்டும் உயிர் வர, சிதையிலிருந்து வெளிவந்து முதுகில் குத்தியிருக்கும் கோடாரியை எடுத்து வில்லன்களை பந்தாடுவார் நம்ம சம்பூ! இப்படி... இதுவரை இந்திய சினிமா கதாநாயகர்கள் செய்யாத ஒரு சாதனையைச் செய்தவர்தான் இந்த சம்பூர்னேஷ் பாபு. நம்ம ஊர் ‘பவர்ஸர்டார்’ சீனிவாசனுக்கெல்லாம் குரு இவர்தான் என அகில உலகமே ‘ஹ்ருதய கலயம்’ படத்தைப் பார்த்த பிறகு மண்டியிட்டு ஒப்புக்கொண்டது.

இத்தனை புகழ் வாய்ந்த இந்த சம்பூர்னேஷ் பாபு நம்ம தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார். ஆம்... விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் சிறப்புத்தோற்றம் ஒன்றில் தோன்றியிருக்கிறாராம் சம்பூர்னேஷ் பாபு. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘கோலி சோடா’ படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இப்போது இந்தப் படத்தில் சம்பூர்னேஷ். வாவ்........!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;