கமல், உதயநிதியுடன் இணையும் கார்த்தி!

கமல், உதயநிதியுடன் இணையும் கார்த்தி!

செய்திகள் 14-Feb-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

வடசென்னை வாசியாக ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்து பாராட்டுக்களை அள்ளிய கார்த்தி வேட்டி, சட்டையுடன் ‘கொம்பன்’ படத்தில் கிராமத்துவாசியாக களமிறங்கியிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மிமேனன் நடிக்கும் இப்படத்தை ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்குகிறார். கார்த்திக்கு மாமனாராக ராஜ்கிரண் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ‘கொம்பனி’ன் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கின்றன.

வரும் மார்ச் 5ஆம் தேதி ‘கொம்பன்’ படத்தின் பாடல்களை வெளியிடவிருக்கிறார்கள். மேலும் படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. உதயநிதியின் ‘நண்பேன்டா’, உலகநாயகனின் ‘உத்தமவில்லன்’ ஆகிய படங்களும் இதே நாளில் வெளியாகவிருப்பதால் கோடை விடுமுறையில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;