கமலின் ‘உத்தம வில்லனை’ முந்தும் கார்த்தியின் ‘கொம்பன்’

கமலின் ‘உத்தம வில்லனை’ முந்தும் கார்த்தியின் ‘கொம்பன்’

செய்திகள் 20-Feb-2015 10:22 AM IST Chandru கருத்துக்கள்

‘பிரியாணி’, ‘மெட்ராஸ்’ என அடுத்தடுத்து தன் படங்களுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பில் உற்சாகத்திலிருக்கும் கார்த்தி, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கொம்பன்’ படத்தின் மீதும் பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார். ‘பருத்தி வீரன்’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்து வேடத்தில் கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கி வருகிறார். கார்த்திக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனனும், அவரின் அப்பாவாக ராஜ்கிரணும் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரவிருக்கின்றன.

‘கொம்பன்’ படம் ஏப்ரல் 2ஆம் தேதி கமலின் ‘உத்தம வில்லன்’, உதயநிதியின் ‘நண்பேன்டா’ ஆகிய படங்களோடு வெளியிட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது அதற்கு ஒரு வாரம் முன்பே, அதாவது மார்ச் 27ஆம் தேதியே படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் சிம்புவின் ‘வாலு’ படமும் ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Key News
Karthi starrer Komban was initially scheduled to get released on April 2nd alongside Kamal's Uthamavillian and Udhayanidhi's Nanbenda. But now the official announcement states that the movie is releasing a week before alongside Simbu's Vaalu on March 27th.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் வீடியோ பாடல் - Seemaraja


;