1 டிக்கெட்டில் 6 படம் - கார்த்திக் சுப்பராஜின் புதிய முயற்சி

1 டிக்கெட்டில் 6 படம் - கார்த்திக் சுப்பாராஜின் புதிய முயற்சி

செய்திகள் 5-Mar-2015 12:34 PM IST VRC கருத்துக்கள்

‘பீட்சா’ மற்று ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களை இயக்கி திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியவர் கார்த்திக் சுப்பராஜ். இவரும் இவரது நண்பர்கள் சிலரும் இணைந்து ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்’ எனும் நிறுவனத்தை துவங்கியுள்ளனர். இந்த நிறுவனத்தின் நோக்கம் சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித்திறமைகள் மிளிர நடிக்க வேண்டும் என்ற தாகமுள்ள இளம் தலைமுறையினருக்கு கரம் நீட்டும் நிறுவனமாக செயல்படவிருக்கிறாது ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்’.

குறும்படங்களை எடுக்கும் இயக்குனர்கள் அணுகக் கூடிய, அங்கீகாரம் பெற்றுத்தரக் கூடிய மற்றும் வருமானம் ஈட்டித்தரக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கி அந்த குறும்படங்களை திரையரங்குகள், தொலைக்காட்சிகள், விமான பொழுதுபோக்கு ஊடகங்கள், வானொலி மற்றும் டிஜிட்டல் அரங்குகளில் வெளியிடவும், விநியோகிக்கவும் துணை நிற்கும் நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படவிருக்கிறது.

இதன் முதல் முயற்சியாக ‘பென்ச் டாக்கீஸ் – தி ஃபஸ்ட் பென்ச்’ என்ற பெயரில் ஆறு குறும்பட இயக்குனர்களால் இயக்கப்பட்ட 6 குறும்படங்களை இணைத்து ஒரு படமாக திரையரங்குகளில் வெளியிட உள்ளது. தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இந்த குறும்படங்கள் நாளை (மார்ச்-6) கோயம்பத்தூர் நகரில் SPI சினிமாஸ், மற்றும் PVR சினிமாஸ் திரையரங்குகளிலும், மார்ச் 13-ஆம் தேதி பெங்களூரு PVR சினிமாஸிலும் வெளியிடப்படுகின்றன. இதனை தொடர்ந்து நாட்டின் மற்ற இடங்களில் இருக்கும் தியேட்டர்களிலும் இப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது.
அந்த 6 குறும்படங்களின் விவரம் வருமாறு: The Lost Paradaise, அகவிழி, புழு, நல்லதோர் வீணை, மது, நீர். இந்த குறும் படங்களை அனில் கிருஷ்ணன், சாருகேஷ் சேகர், கோபகுமார், மோனேஷ், ரத்னகுமார், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த குறுபடங்களை ஸ்பெஷல் காட்சியாக நேற்று திரையிட்டு காட்டினார்கள். அந்த 6 குறும்படங்களில், தான் காதலிப்பவளிடம் தன் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இளைஞனின் கதையை கருவாக வைத்து எடுக்கப்பட்டிருந்த ‘மது’ என்ற குறும்படமும், மீனவர்கள் பிரச்சனையை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ‘நீர்’ என்ற குறும்படமும் தான் நம் மனதை கவர்ந்தது. மற்ற 4 குறும்படங்கள் என்ன கதையை சொல்ல வந்தது என்பது தெரியவில்லை!

ஆனால், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜும், அவரது நண்பர்களும் இணைந்து துவங்கியிருக்கும் இந்த புதிய முயற்சி மூலம் நிறைய திறமை சாலிகள் வெளிச்சத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. இந்த புதிய முயற்சியை பாராட்டலாம், வரவேற்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - டீசர்


;