ஹீரோயினாக புரொமோஷன் பெற்ற குழந்தை நட்சத்திரம்!

ஹீரோயினாக புரொமோஷன் பெற்ற குழந்தை நட்சத்திரம்!

செய்திகள் 13-Mar-2015 2:36 PM IST VRC கருத்துக்கள்

‘வர்மம்’ என்ற படத்தை இயக்கிய லாரா இயக்கியுள்ள படம் ’விந்தை’. இப்படத்தில் மகேந்திரன், மனிஷாஜித் ஜோடியாக நடித்துள்ளனர். ‘விழா’ படத்தில் கதாநாயகனாக நடித்த மகேந்திரன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் மனிஷாஜித் ‘கம்பீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இந்தப் படத்தின் மூலம் அவர் ஹீரோயினாக புரொமோஷன் பெற்றிருக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் லாரா படம் குறித்து கூறும்போது, ‘‘படம் பார்ப்பவர்களை இரண்டு மணிநேரம் சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இப்படத்தை ககலகலப்பான ஒரு காமெடி படமாக எடுத்திருக்கிறேன். குடும்பத்துடன் வந்து பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு படமாக இது இருக்கும்’’ என்றார்.
‘காதல் 2014’ என்ற படத்தை தயாரித்த ‘அன்னை புதுமை மாதா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் யேசுதாஸ், ஆல்வின், கெவின் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரத்தீஷ்கண்ணா ஒளிப்பதிவு செய்ய, வில்லியம்ஸ் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதாம். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி ட்ரைலர்


;