எப்போதும் இணைபிரியாத ராஜா - மணிரத்னம்!

எப்போதும் இணைபிரியாத ராஜா - மணிரத்னம்!

செய்திகள் 2-Jun-2015 10:50 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்த்திரையுலகில் சிலரின் கூட்டணி மட்டும் எப்போதுமே ரசிகர்களால் மறக்க முடியாததாக இருக்கும். அப்படி ஒரு கூட்டணிதான் இளையராஜா & மணிரத்னம். 1983ல் ‘பல்லவி அனுபல்லவி’ என்ற கன்னட படம் மூலம் திரையுலகில் இயக்குனராக களமிறங்கினார் மணிரத்னம். அப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. அதனைத் தொடர்ந்து தமிழில் மணிரத்னம் இயக்குனராக அறிமுகமான படம் ‘பகல் நிலவு’. இப்படத்திற்கும் ராஜாதான் மியூசிக். அதன்பிறகு இதயகோவில், மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, சத்ரியன் (கதாசிரியர், தயாரிப்பாளர்), அஞ்சலி, தளபதி என வரிசையாக மணிரத்னம் இயக்கிய அத்தனை தமிழ்ப்படங்களுக்கும் இளையராஜாதான் இசை. பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ரகம். இந்த இருவர் கூட்டணியுடன் மூன்றாவதாக வெற்றிக்கு கைகோர்த்தவர் கவிஞர் வைரமுத்து. இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத கூட்டணி என்றால் இவர்களே கண்முன் நிற்பார்கள்.

1990ல் வெளிவந்த ‘ரோஜா’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் மணிரத்னம். அப்போது முதல் மணிரத்னம் கடைசியாக இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படம் வரை ரஹ்மான்தான் இசை. மணிரத்னத்துடன் ரஹ்மான் இணைந்த பிறகு ராஜாவும் மணியும் அதன்பிறகு எந்தப் படத்திலும் சேரவேயில்லை. தொழில்ரீதியாக இருவரும் பிரிந்திருந்தாலும் காலம் எப்போதுமே அவர்களை பிரித்துப் பார்த்ததில்லை.

ஆம்... இளையராஜாவுக்கும், மணிரத்னத்திற்கும் இன்று பிறந்தநாள். எங்கோ தனித்தனியாக தங்களின் பிறந்தநாளை கொண்டாடினாலும் ஒவ்வொரு வருடமும் இதே நாளில்தான் அவர்கள் இருவரும் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர். எப்போதுமே ராஜாவையும், மணியையும் காலம் இணை பிரியாத ஜோடிகளாகவே வைத்திருக்க விரும்பியிருக்கிறது.

இந்தியத் திரையுலகின் இரண்டு ஜாம்பவான்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;