ஜெயம் ரவி, சந்தானத்துடன் மோதும் டைனோசர்ஸ்!

ஜெயம் ரவி, சந்தானத்துடன் மோதும் டைனோசர்ஸ்!

செய்திகள் 2-Jun-2015 4:04 PM IST Chandru கருத்துக்கள்

லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்திருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் வரும் ஜூன் 12ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதே நாளில் சந்தானம் நடிப்பில் முருகானந்த் இயக்கியிருக்கும் ‘இனிமே இப்படித்தான்’ படமும் ரிலீஸாகிறது. மேற்கண்ட 2 படங்களுமே ரொமான்டிக் காமெடிப் படங்களாக உருவாகியிருக்கின்றன. இரண்டு படங்களுக்குமே ஓரளவு எதிர்பார்ப்பிருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த 2 படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்கு, ஹாலிவுட் படமான ‘ஜுராசிக் வேர்ல்டு’ பலத்த போட்டியை உருவாக்கும் என்று தெரிகிறது.. ஏற்கெனவே 3 பாங்களாக வெளிவந்த ‘ஜுராசிக் பார்க்’ படம் உலகநாடுகள் உட்பட இந்தியாவிலும் நல்ல வசூலைப் பெற்றது. இந்த 4ஆம் பாகமான ‘ஜுராசிக் வேர்ல்டு’ படத்தின் டிரைலரக்கும் இணையதளங்களில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் இப்படமும் வசூலில் பெரிய அளவில் சாதிக்கும் என்கிறார்கள். அதோடு இப்படம் தமிழிலும் வெளிவருவதால் ரோமியோ ஜூலியட், இனிமே இப்படித்தான் படங்களுக்கு நிச்சயம் பலத்த போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஜுராசிக் வேர்ல்டு ஹாலிவுட் படம் ஜூன் 11ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;