4 நாட்களில் 1300 கோடி வசூல் செய்த ‘ஜுராசிக் வேர்ல்டு’

4 நாட்களில் 1300 கோடி வசூல் செய்த ‘ஜுராசிக் வேர்ல்டு’

செய்திகள் 15-Jun-2015 11:02 AM IST Chandru கருத்துக்கள்

ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் வெளியான ‘ஜுராசிக் வேர்ல்டு’ படத்தின் வசூல் சாதனை அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. கடந்த 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படத்தின் முதல் 4 நாட்கள் வசூல் மட்டுமே 1310 கோடி ரூபாயை எட்டியிருக்கிறதாம். இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களிலும் உலகளவில் 2வது அதிகபட்ச முதல் வார இறுதி கலெக்ஷன் இதுதானாம். (இப்படத்தின் பட்ஜெட் தோராயமாக 960 கோடி ரூபாய்)

2012ஆம் ஆண்டு வெளிவந்த ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படம் முதல் வார இறுதியில் 1330 கோடி ரூபாய் வசூல் செய்தததே இதுவரை அதிகபட்ச சாதனையாகும். கடந்த மாதம் வெளிவந்த இப்படத்தின் 2ஆம் பாகமான ‘அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ திரைப்படம் 1220 கோடி ரூபாய் வசூல் செய்து 3வது இடத்தில் இருக்கிறது.

4 நாட்களில் மட்டுமே இவ்வளவு பெரிய தொகையை வசூலித்துள்ளதால், இன்னும் வசூலில் பல சாதனைகளை ‘ஜுராசிக் வேர்ல்டு’ திரைப்படம் படைக்கும் என பாக்ஸ் ஆபிஸ் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜுராசிக் வேர்ல்டு - டிரைலர் 2


;