ஜுராசிக் வேர்ல்டின் ‘அடேங்கப்பா...!’ வசூல்!

ஜுராசிக் வேர்ல்டின் ‘அடேங்கப்பா...!’ வசூல்!

செய்திகள் 23-Jun-2015 1:18 PM IST Top 10 கருத்துக்கள்

‘எதிர்பார்க்கலைல... இப்படி ஒரு வசூல் வரும்னு எதிர்பார்க்கலைல’ என டைனோசர்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் பார்த்துக் கேட்பதுபோல் இருக்கிறது ‘ஜுராசிக் வேர்ல்டு’ படத்தின் வசூல் சாதனை. கடந்த 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் முதல் 4 நாட்களிலேயே 3200 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூல் செய்தது. தற்போது 10 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (6300 கோடி ரூபாய்) வசூல் செய்து சாதனை புரிந்திருக்கிறது.

உலக அளவில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை மிக வேகமாக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் புரிந்திருக்கிறது ‘ஜுராசிக் வேர்ல்டு’. சமீபத்தில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்’ படத்தின் 7ஆம் பாகம் 17 நாட்களிலும், அதற்கு முன்பு ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் முதல் பாகம் 14 நாட்களிலும் இந்த சாதனையை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜுராசிக் வேர்ல்டு - டிரைலர் 2


;