‘காக்க முட்டை’ இயக்குனரின் அடுத்த படம்!

‘காக்க முட்டை’ இயக்குனரின் அடுத்த படம்!

செய்திகள் 14-Jul-2015 1:31 PM IST VRC கருத்துக்கள்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் சமீபத்தில் வெளியான ‘காக்கா முட்டை’. சிறிய பட்ஜெட்டில் தயாராகி பெரும் வசூல் ஈட்டிய இப்படத்தை மணிகண்டன் இயக்கியிருந்தார். ‘காக்கா முட்டை’யின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மணிகண்டன் அடுத்து இயக்கப் போகும் படம் என்ன என்ற கேள்வி தான் அனைவரிடத்திலும் இப்போது இருந்து வருகிறது! நமக்கு கிடைத்த தகவலின்படி மணிகண்டன் அடுத்து ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்பு செழியன் தயாரிப்பில் படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக இருக்குமாம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது! ‘வெள்ளக்கார துரை’ வெற்றிப் படத்தை தயாரித்த அன்பு செழியன், ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தைய்யா இயக்கத்தில், விஷால் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ


;