சிம்புவின் ‘வாலு’ ரிலீஸுக்கு கிடைத்தது சுதந்திரம்!

சிம்புவின் ‘வாலு’ ரிலீஸுக்கு கிடைத்தது சுதந்திரம்!

செய்திகள் 6-Aug-2015 3:28 PM IST Chandru கருத்துக்கள்

‘வாலு’ படத்தை திரையில் காண்பதற்காக கிட்டத்தட்ட 3 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள். ஏற்கெனவே பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஏதேதோ காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே வந்தது. கடைசியாக படத்தை தானே வாங்கி வெளியிடுவது என்ற முடிவுக்கும் வந்தார் சிம்பு. ஆனால், அதற்கும் இடையூறாக சில வழக்குகள் ‘வாலு’ ரிலீஸுக்கு எதிராக தொடுக்கப்பட, படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.

கடந்த சில நாட்களாக எதிர்த்தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ‘வாலு’ ரிலீஸுக்கு எதிரான இடைக்கால உத்தரவும் தளர்த்தப்பட்டிருக்கிறதாம். இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ‘வாலு’ படம் வரும் சுதந்திரதினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட பல மாதப் போராட்டங்களுக்கப்பிறகு ‘வாலு’ படத்தின் ரிலீஸிற்கு சுதந்திரம் கிடைத்திருப்பதைப் போன்று கொண்டாடி வருகிறார்கள் சிம்பு ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;