ஆயிரம் கோடி பட்ஜெட் : 10 ஆயிரம் கோடி வசூல்!

ஆயிரம் கோடி பட்ஜெட் : 10 ஆயிரம் கோடி வசூல்!

செய்திகள் 7-Aug-2015 9:53 AM IST Chandru கருத்துக்கள்

ஒரு படம் குழந்தைகளுக்குப் பிடித்துவிட்டால் போதும், குடும்பங்களை தியேட்டருக்கு இழுத்து வரும் வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் தமிழில் ஹிட்டான ‘காஞ்சனா 2’ மற்றும் ‘பாகுபலி’ திரைப்படங்கள். இதுபோலவே உலகளவிலும் ஒரு படத்திற்கு குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஜுராஸிக் வேர்ல்டு. இதுவரை வெளிவந்த 3 பாகங்களைவிட மிகப்பெரிய அளவில் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது இப்படம். இத்தனைக்கும் 90களில் வந்த முதல் பாகத்தைவிட இப்படம் சுமாராக இருப்பதாகத்தான் விமர்சனங்கள் எழுந்தன. அப்படியிருந்தும் இப்படம் வெற்றியடைக்காரணம், குழந்தைகளை இப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதுதான்.

சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெளிவந்த இப்படம் 50 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதோடு உலகளவிலான வசூல் சாதனையில் முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் படங்களின் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது ‘ஜுராஸிக் வேர்ல்டு’. 2012ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அவெஞ்சர்ஸ் படத்தின் சாதனையை முறியடித்துதான் இந்த இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது இப்படம். முதல் 2 இடங்களில் அவதார் (17 ஆயிரம் கோடி), டைட்டானிக் (14 ஆயிரம் கோடி) ஆகிய படங்கள் இடம்பிடித்திருக்கின்றன. இந்த சாதனையையும் ‘ஜுராஸிக் வேர்ல்டு’ முறியடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜுராசிக் வேர்ல்டு - டிரைலர் 2


;