முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் கதை ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’

முழுக்க முழுக்க ரயிலில் நடக்கும் கதை ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’

செய்திகள் 9-Sep-2015 4:33 PM IST VRC கருத்துக்கள்

‘என்.சி.ஆர்.மூவி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.சுந்தர் ராஜன், கே.பாலசுப்பிரமணியன், என்.ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. ’நாளைய இயக்குனர் சீஸன்-2’வில் பணியாற்றிய என்.ராஜேஷ் குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘எங்கேயும் எப்போதும்’, ‘சென்னையில் ஒரு நாள்’ ஆகிய படங்களில் நடித்த மிதுன் கதாநாயகனாக நடிக்க, மிருதுலா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆதவன், அனூப் அரவிந்த், அஞ்சலி தேவி, ரோமியோ பால், அருண் ஆகியோரும் நடித்துள்ளனர். நாளை மறுநாள் (செப்டம்பர்-11) ரிலீசாகவிருக்கும் இப்படம் குறித்து இயக்குனர் ராஜேஷ் குமார் கூறும்போது,

‘‘இப்படத்தின் கதை முழுக்க முழுக்க ரயிலில் நடப்பது மாதிரி படமாக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ஒரு இரயிலில் திருநெல்வேலி வரை பயணிக்கும் கதாநாயகன், கதாநாயகி ஆகியோருக்கு இடையில் நடைபெறும் விறுவிறுப்பான சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் படத்தின் கதை. படத்திற்கு ஏன் இந்த மாதிரி ஒரு தலைப்பை சூட்டியிருக்கிறீர்கள் என்று என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என்ற டைட்டிலுக்கான விளக்கம் படத்தை பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். இந்த கதைக்கு இந்த டைட்டிலை தவிர வேறு எந்த டைட்டிலும் செட் ஆகாது என்பதால் இந்த டைட்டிலை வைத்தேன். இந்த படம் அனைவருக்கும் வித்தியாசமான ஒரு படமாக அமையும்’’ என்றார்.
இபபடத்தின் ஒளிப்பதிவு பணியை என்.எஸ்.ராஜேஷ்குமார் செய்திருக்கிறார். அறிமுக இசை அமைப்பாளர் விஜய் பெஞ்சமின் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;