கிக்’ பட இயக்குனரிடம் தனி ஒருவன்!

கிக்’ பட இயக்குனரிடம் தனி ஒருவன்!

செய்திகள் 29-Sep-2015 10:15 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. மோகன் ராஜா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா முதலானோர் நடித்த இப்படம் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ரீ-மேக் ஆக இருக்கிறது என்றும் தெலுங்கு ரீ-மேக்கில் ராம்சரண் நடிக்க இருக்கிறார் என்றும் செய்தியை வெளியிட்டிருந்தோம். இப்போது தெலுங்கு ‘தனி ஒருவன்’ படத்தை இயக்குவது யார் என்பது முடிவாகியுள்ளது. தெலுங்கு ‘கிக்’ படத்தை இயக்கிய சுரேந்தர் ரெட்டி ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீ-மேக்கை இயக்க இருக்கிறாராம்! ‘தனி ஒருவனி’ன் ஹிந்தி ரீ-மேக்கை மோகன் ராஜாவே இயக்க இருக்கிறாராம். இந்த தகவலை மோகன் ராஜாவே உறுதி செய்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்தை ஹிந்தியில் இயக்கி பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கும் மோகன் ராஜா தனி ஒருவனுக்கான ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஐரா டீஸர்


;