படப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு முகத்தில் காயம்!

படப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு முகத்தில் காயம்!

செய்திகள் 20-Oct-2015 10:38 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ தந்த வெற்றி உற்சாகத்தில் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அருண் விஜய். ராம் சரண் தேஜாவுக்கு வில்லனாக அருண் விஜய் நடித்த ‘புரூஸ் லீ’ தெலுங்கு படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கன்னடத்தில் அருண் விஜய் அறிமுகமாகும் ‘சக்ரவியூகா’ பட ஷூட்டிங்கின்போது, கண்ணாடி உடைந்து தனது முகத்தில் அடிப்பட்டிருப்பதாக அருண் விஜய் ட்வீட் செய்திருப்பதால் ரசிகர்கள் பதட்டமடைந்துள்ளனர். ஆனால், ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு இது சாதாரணம்தான் என்றும், இன்னும் ஒரு சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அருண் விஜய் வழக்கம்போல் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

‘வா டீல்’ நாயகன் விரைவில் குணமடைய வாழ்த்துவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் ட்ரைலர்


;