வெளிநாட்டு ரிலீஸில் 'வேதாளம்' புதிய சாதனை!

வெளிநாட்டு ரிலீஸில் 'வேதாளம்' புதிய சாதனை!

செய்திகள் 3-Nov-2015 11:16 AM IST VRC கருத்துக்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ படம் வருகிற 10–ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. பெரிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் இந்தியாவில் ரிலீசாகும் அன்றே வெளிநாடுகளிலும் ரிலீசாவது வழக்கம்! அதைப் போன்று அஜித்தின் ‘வேதாளம்’ ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், யு.எஸ்.ஏ., இலங்கை உட்பட பல வெளிநாடுகளில் அதே தினம் ரிலீசாகவிருப்பதோடு போலந்து நாட்டிலும் வெளியாகவிருக்கிறது. இந்நாட்டில் இதுவரை எந்த தமிழ் படமும் நேரடியாக ரிலீசாசனதில்லை என்று கூறப்படுகிறது. அஜித்தின் ‘வேதாளம்’ படம் போலந்தில் ரிலீசாவதால அஜித்துக்கு மேலும் ஒரு கௌரவம் கிடைத்திருப்பதோடு, புதிய சாதனையும் படைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;