விஷாலுடன் மோதும் தினேஷின் ‘உள்குத்து’

விஷாலுடன் மோதும் தினேஷின் ‘உள்குத்து’

செய்திகள் 9-Nov-2015 11:08 AM IST Chandru கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்க, கார்த்திக் ராஜு இயக்க, ஜே.செல்வகுமார் தயாரிக்கும் படம் உள்குத்து. ‘திருடன் போலீஸ்’ வெற்றிக் கூட்டணி இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. தினேஷுக்கு ஜோடியாக நந்திதா நடிக்கும் ‘உள்குத்து’ படத்தில் பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், ‘பாண்டிய நாடு’ சரத், திலிப் சுப்புராயன் மற்றும் சமையல் கலை தாமோதரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

‘உள்குத்து’ படத்தின் பாடல்களை டிசம்பர் மாதம் வெளியிட உள்ளனர். வரும் பொங்கல் அன்று ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது ‘உள்குத்து’ என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் ரேஸில் முதல் ஆளாக விஷால் ஏற்கெனவே தன்னை அறிவித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘கதகளி’ படமும் பொங்கல் ரிலீஸாக வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;