மீண்டும் ஹீரோவாகிறார் கேப்டன் விஜயகாந்த்!

மீண்டும் ஹீரோவாகிறார் கேப்டன் விஜயகாந்த்!

செய்திகள் 20-Nov-2015 3:40 PM IST Chandru கருத்துக்கள்

2010ல் வெளிவந்த ‘விருதகிரி’ படத்துடன் சினிமாவிலிருந்து விலகிய கேப்டன் விஜயகாந்த் அரசியலில் பிஸியாகிவிட்டார். இதற்கிடையில் வேறெந்தப் படத்திலும் நடிக்காத கேப்டன், இந்த வருடம் அவரது மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் மட்டும் தலை காட்டியிருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில் மீண்டும் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘தமிழன் என்று சொல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். விஜயகாந்த் ஹீரோவாக இருந்தாலும் இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக அவரது மகன் சண்முகப் பாண்டியனும் நடிக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். விஜயகாந்தின் சொந்த பேனரான ‘கேப்டன் சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை (22-11-2015) நடைபெறவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மதுரவீரன் - டிரைலர்


;