10 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த நயன்தாரா!

10 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த நயன்தாரா!

செய்திகள் 23-Nov-2015 11:24 AM IST Chandru கருத்துக்கள்

2005ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் நயன்தாரா. தனது முதல் படமே வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து பல வாய்ப்புகள் நயன்தாரா வீட்டுக்கதவை தட்டின. தன் அழகான தோற்றத்தாலும், அற்புதமான நடிப்பாலும் மளமளவென தமிழின் முன்னணி ஹீரோக்கள் ஒவ்வொருடனும் படம் செய்யத் தொடங்கினார் நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உட்பட பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா இதுவரை கமல் மற்றும் விக்ரமுடன் ஜோடி சேராமல் இருந்தார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது விக்ரமுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் நயன்தாரா. ‘அரிமா நம்பி’ பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. ‘புலி’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீம் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

நயன்தாராவைப் பொறுத்தவரை தற்போது விக்ரமுடனும் ஜோடி சேர்ந்துவிட்டதால் உலகநாயகனுடன் அவர் எப்போது இணைவார் என்பதே ‘லேடி சூப்பர்ஸ்டார்’ ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;