நந்திதாவின் ‘V’ சென்டிமென்ட்!

நந்திதாவின்  ‘V’ சென்டிமென்ட்!

கட்டுரை 25-Nov-2015 12:49 PM IST VRC கருத்துக்கள்

‘உப்புகருவாடு, ‘அஞ்சல’, ‘இடம் பொருள் ஏவல்’ என தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவிருப்பதால் எப்போதும் இல்லாத ஒரு சந்தோஷத்தில் இருக்கிறார் ‘தெத்துப் பல் அழகி’ நந்திதா! நாளை மறுநாள் (27-11-15) ரிலீசாகவிருக்கும் ராதாமோகனின் ‘உப்புகருவாடு’ பட புரொமோஷனுக்காக பெங்களூரில் இருந்து சென்னை பறந்து வந்தவருடனான ஒரு மினி பேட்டி!

நிறைய தமிழ் படங்களில் நடிக்கிறீஙக! சென்னையில் செட்டிலாகிவிட வேண்டியது தானே?

என் சொந்த பந்தங்கள் எல்லாம் பெங்களூரில் தான் இருக்காங்க! அது மட்டுமில்லாம நான் நடித்த பெரும்பாலான படங்களின் ஷூட்டிங்கும் சென்னையில் நடந்தது கிடையாது. எல்லாம் மதுரை, காரைக்குடி, நாகர்கோயில், கோயம்புத்தூர்னு தான் நடந்திருக்கு, நடந்துகிட்டுருக்கு! சென்னையில வீடு எடுத்து தங்கினா கூட பெங்களூரிலிருந்து சென்னைக்கு வர்ற மாதிரி தான் சென்னையிலிருந்து அந்தந்த லொகேஷனுக்கு போக வேண்டியிருக்கும்! அதை விட பெங்களூரிலிருந்து நேரா ஷூட்டிங் லொகேஷனுக்கு போறதே ஈசியா இருக்கு! அதனால இப்போதைக்கு நான் பெங்களூரு வாசி தான்!

ராதாமோகனின் ‘உப்புகருவாடு’ எப்படி வந்திருக்கு?

ராதாமோகன் சார் ஸ்டைலில் வித்தியாசமான ஒரு படம்! இப்படத்துல வித்தியாசமான ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இப்படம் துவங்குவதற்கு முன் ராதாமோகன் சார் ‘இந்த கதைக்கு நந்திதா தான் சூட் ஆவாங்க, அவங்க தான் வேண்டும்’ என்று சொல்லியிருக்கார். படத்துல நடிக்க துவங்கிய் நேரத்துல இதை கேள்விப்பட்ட நானும் ராதாமோகன் சார்கிட்ட ‘எந்த காரணத்துக்காக இக்கேரக்டருக்கு என்னையே செலக்ட் பண்ணினீங்க? ஒரு வேளை நான் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தா நீங்க வேறு யாரை செலக்ட் பண்ணியிருப்பீங்க?’ன்னு நிறைய தடவை கேட்டிருக்கேன்! ஆனால் அப்போதெல்லாம் அவரிடமிருந்து மௌனத்துடன் கூடிய ஒரு சிரிப்பு பதில் தான் வரும்! இப்படி நிறைய தடவை கேட்டும் அவரிடமிருந்து என் கேள்விக்கு பதில் வரலை! சரி படம் வரட்டும், அதற்கு பிறகாவது அவர் பதில் சொல்வாரா பார்ப்போம்! என்று சஸ்பென்ஸ் வைக்கிறார் நந்திதா!

அடுத்தடுத்து வரவிருக்கிற ‘அஞ்சல’ மற்றும் ‘இடம் பொருள் ஏவல்’ படங்கள் குறித்து?

‘அஞ்சல’ ஒரு டீக்கடையை சுற்றிச் சுழலும் கிராமது கதை! இதுல மதுரை பொண்ணா, போல்டான ஒரு பொண்ணா நடிச்சிருக்கேன். இப்படம் கதாநாயகன், கதாநாயகியை சுற்றி வருகிற கதை இல்லை! எல்லா கேரக்டருக்கும் சம அளவு பங்கு இருக்கும். டீக்கடை சம்பந்தப்பட்ட கதையில நடிச்சிருக்கேன்னாலும் நிஜத்தில் நான் இதுவரை டீ, காபி எல்லாம் குடிச்சதில்லை. எனக்கு அந்த பழக்கம் இல்லை!

சீனுராமசாமி சாரின் ‘இடம் பொருள் ஏவல்’ படத்திலும் ஒரு போல்டான பொண்ணா தான் நடிச்சிருக்கேன். காட்டு பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பொண்ணா வருவேன்! இதுல என்னோட கெட்-அப், லுக், பாடி லாங்வேஜ் எல்லாம் ரொம்பவும் வித்தியாசமா இருக்கும். சுருக்கமாக சொன்னா இப்படத்துல நீங்க வேறு ஒரு நந்திதாவை பார்ப்பீங்க! இப்படங்கள் தவிர ‘உள்குத்து’, ‘காத்திருப்போர் பட்டியல்’ என இரண்டு படங்கள்ல நடிச்சிக்கிட்டிருக்கேன். இதுல மீண்டும் தினேஷோட நடிக்கிற ‘உள்குத்து’ படத்தோட ஷூட்டிங் முடியிற கட்டத்தில் இருக்கு.

உங்க கூட நடிச்ச ஹீரோக்கள் குறித்து?

என் முதல் பட ஹீரோ ‘அட்டகத்தி’ தினேஷ் ரொம்பவும் அமைதியானவர்! நடிப்பில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள கூடியவர். ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமார’ படத்துல பார்த்தது போல அப்படியே மாறாத நட்புடன், எளிமையா இருக்கிறார் விஜய் சேதுபதி! அவருடைய இயல்பான நடிப்பை நான் ரொம்பவும் ரசிப்பேன். விமல் ரொம்பவும் ஜோவியலா சிரிக்க சிரிக்க பேசக் கூடியவர்! ஆனா என்ன, அவர் பேசுவது புரியவே புரியாது. நான் தமிழில் பேசுவதை அவர் கிண்டலடிப்பார். அதனால் நான் அவருக்கு முன்னாடி தமிழ்ல அதிகமா பேசுறதில்ல. விஷ்ணு வெரி நைஸ் பெர்சன். நட்புக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பவர். விஜய் சாரின் ‘புலி’யில் ஒரு சிறிய கேரக்டரில் தான் நடிச்சிருக்கேன்னாலும் விஜய் சார் கூட நடிச்சது மறக்க முடியாத அனுபவம்!

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நான் இணைந்து நடித்த பெரும்பாலான ஹீரோக்களின் பெயரும் ‘வி’யில் தான் துவங்கும். ‘வி’ என்றால் வெற்றி என்பதை போல நான் நடிச்ச பெரும்பாலான படங்களும் வெற்றிப் படங்களா அமைஞ்சிருக்கு! இதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி’’ என்று தனது தெத்துப் பல் காட்டி சிரித்தார் நந்திதா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அஞ்சல - டிரைலர்


;