செல்வராகவன் படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட்!

செல்வராகவன் படத்திற்கு ‘A’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 11-Dec-2015 4:51 PM IST VRC கருத்துக்கள்

செல்வராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. புதுமுகங்கள் பாலகிருஷ்ணன், வாமிகா ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை செல்வராகவனின் நெருங்கிய நண்பரும்,தெலுங்கு மொழியில் 100 படங்களுக்கு மேல் எடிட்டராக பணிபுரிந்துள்ள கோலா பாஸ்கர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் கம்பெனிக்கு இசை ஆல்பங்கள் தயாரித்த அம்ரித் இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் ரிலீசாகவிருப்பதை முன்னிட்டு இப்படம் இன்று சென்சார் குழுவினரின் பார்வைக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் எந்த கட்டும் சொல்லாமல், வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க கூடிய படம் என்ற ‘ஏ’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கும் முதல் படம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்ஜிகே டீசர்


;