சென்சார் குழுவினரின் பாராட்டு பெற்ற தங்கமகன்!

சென்சார் குழுவினரின் பாராட்டு பெற்ற தங்கமகன்!

செய்திகள் 12-Dec-2015 10:09 AM IST VRC கருத்துக்கள்

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள ‘தங்கமகன்’ வருகிற 18-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை தொடர்ந்து அதே டீம் இணைந்து உருவாக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிலீசுக்கு தயாராகியிருக்கும் ‘தங்கமகன்’ படம் சென்சார் நேற்று செய்யப்பட்டது. இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ‘நீட் ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் ஃபிலிம்’ என்று தங்கமகனுக்கு பாராட்டு தெரிவித்து, படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘தங்கமகன்’ படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், அனிருத் என பெரும் கலைஞர்கள் இணைந்துள்ள இப்படம் தெலுங்கில் ‘நவ மன்மதுடு’ என்ற பெயரில் அதே தினம் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;