விஜய்சேதுபதியுடன் இணையும் ‘பாகுபலி’ ஹீரோயின்!

விஜய்சேதுபதியுடன் இணையும் ‘பாகுபலி’ ஹீரோயின்!

செய்திகள் 15-Dec-2015 10:55 AM IST VRC கருத்துக்கள்

‘தென்மேற்கு பருவகாற்று’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை தொடர்ந்து சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கும் படம் ‘தர்மதுரை’. ரஜினி பட டைட்டிலில் உருவாகும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘பாகுபலி’ ஹீரோயின் தமன்னா நடிக்கவிருக்கிறார். விஜய்சேதுபதி, தமன்னா இணைந்து நடிக்கும் முதல் டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஸ்டுடியோ 9 மீடியா’ நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷும், கார்த்திக்கும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சீனுராமசாமியுடன் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இணைந்த கவிஞர் வைரமுத்து, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறார்கள். சீனுராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீசாகவில்லை என்றாலும் ‘தர்மதுரை’யின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;