சிம்பு வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு!

சிம்பு வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு!

செய்திகள் 15-Dec-2015 11:46 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் அனிருத் இசை அமைத்து சிம்பு பாடியதாக கூறப்படும் ஒரு பீப் சாங் இணையத்தில் வெளியாகியிருந்தது. இந்த பாடலில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக கூறி சில பெண்கள் அமைப்பினர் சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்கு தொடர்ந்திருப்பதோடு சில மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை மாணவர் சங்கம் சென்னை தி.நகரில் இருக்கும் சிம்பு வீட்டு முன்பு அவருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியோடு சிம்புவின் புகைப்படங்களையும் தீயிட்டு கொளுத்தினர். அதன் பிறகு சிம்புவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடரும் என்று அறிவித்த மாணவ அமைப்பினர் அங்கிருந்து கலைது சென்றனர். சிம்பு அனிருத்துக்கு எதிராக நேற்று விருது நகர், ராமேஸ்வரம், மதுரை சேலம் என தமிழகத்தில் இதர மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்றும் சிம்பு வீட்டுக்கு முன் இந்திய ஜனநாயக கூட்டமைப்பு (DYFI- Democratic Youth Federation of India) சார்பில் சிம்புவை கைது செய்ய வலியுறுத்தி தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் சிம்பு வீட்டு முன் காவல் துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;