‘எந்திரன் 2’ : ஷங்கரின் அப்டேட்!

‘எந்திரன் 2’ : ஷங்கரின் அப்டேட்!

செய்திகள் 16-Dec-2015 10:21 AM IST Chandru கருத்துக்கள்

‘எந்திரன் 2’ உருவாகவிருக்கிறது என்ற செய்தி சில பல மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் வெளியானபோது பலரும் இதனை வதந்தி என்றே நினைத்தனர். அதோடு மீடியாக்களும் தங்கள் பங்குக்கு அர்னால்ட் நடிக்கிறார், அமிதாப் பச்சன் நடிக்கிறார், விக்ரம் வில்லனாகிறார், ரஜினியுடன் அஜித் கைகோர்க்கிறார் என ஆளாளுக்கு ஒரு தகவலை வெளியிட, ‘இது வதந்திதான் போல...’ என பலரும் ‘உச்’ கொட்டினார்கள். ஆனால், லைக்கா புரொடக்ஷன் ‘எந்திரன் 2’வை கையிலெடுத்த பிறகே பலருக்கும் படம் உருவாகப்போகிறது என்ற நம்பிக்கை வந்தது.

தற்போது வரை ‘எந்திரன் 2’வில் உறுதியாகியிருக்கும் விஷயங்கள் என்றால்... ரஜினி ஹீரோ, எமிஜாக்ஷன் ஹீரோயின், லைக்கா தயாரிப்பு, ஷங்கர் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஆகியவை மட்டுமே. இதுதவிர தனது வழக்கமான டெக்னீஷியன்களை இப்படத்திலும் ஷங்கர் பயன்படுத்துவார் என்று தெரிகிறது. அர்னால்ட் நடிக்கிறாரா இல்லையா என்பதை இதுவரை அதிகாரபூர்வமாக யாரும் உறுதி செய்யவில்லை. ஆனால், ‘கத்தி’ வில்லன் நீல் நிதின் முகேஷ் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

அதோடு, நேற்று ஷங்கர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘எந்திரன் 2’ குறித்து வெளியிட்ட தகவல் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரிய சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறது. " 2.0 shoot starts from tomorrow ... Excited!!!" என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்து, எந்திரன் 2 படப்பிடிப்பை உறுதி செய்துள்ளார் ஷங்கர். கபாலி, எந்திரன் 2 என ஒரே நேரத்தில் இரட்டை சவாரியில் பயணித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர்ஸ்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;