ரஜினி வழியில் விக்ரம்!

ரஜினி வழியில் விக்ரம்!

செய்திகள் 16-Dec-2015 1:51 PM IST VRC கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் ‘ அரிமா நம்பி’ படப் புகழ் ஆனந்த் சங்கர் இயக்கும் படம், திரு இயக்கும் படம் என இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் பூஜை இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. விக்ரமின் 52-ஆவது படமான இப்படத்தை ‘புலி’ படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான ஷிபு தமீன் தயாரிக்கிறார் என்றும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்றும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார் என்ற விவரங்களை சமீபத்தில் நமது இணைய தளத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் மலேசியாவில் துவங்கவிருக்கிறது என்ற அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜியின் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி, பிறகு பல நாட்கள் மலேசியாவில் நடைபெற்றது. ரஜினியின் ‘கபாலி’ பட வழியில் இப்போது விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;