ஹாலிவுட்டுக்கு சவால்விடும் ‘எந்திரன் 2’ டெக்னீஷியன் லிஸ்ட்!

ஹாலிவுட்டுக்கு சவால்விடும் ‘எந்திரன் 2’ டெக்னீஷியன் லிஸ்ட்!

செய்திகள் 17-Dec-2015 9:30 AM IST Chandru கருத்துக்கள்

இன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்டட் வான்டட் ஃபிலிம் என அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு படம் என்றால் அது நிச்சயம் சூப்பர்ஸ்டார் - ஷங்கரின் ‘எந்திரன் 2’வாகத்தான் இருக்க முடியும். தென்னிந்திய சினிமாவின் ஒட்டுமொத்த வசூல் ரெக்கார்டுகளையும் முறியடித்த படம் ‘எந்திரன்’. அதன் 2ஆம் பாகம் உருவாகப்போகிறது என்றதுமே ரசிகர்களிடம் கிளம்பியது எதிர்பார்ப்பு ஃபயர். நேற்று சென்னையில் ரொம்பவும் சிம்பிளாக பூஜை போடப்பட்டு ‘எந்திரன் 2’ படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் ஷங்கர்.

இந்தியாவிலேயே அதிகபட்ச பொருட்செலவில் தயாராகும் படம் என்ற பெருமையோடு ‘எந்திரன் 2’வை அறிமுகம் செய்திருக்கிறார்கள் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். ‘ஐ’ நாயகி எமி ஜாக்ஸன் இப்படத்தில் ரஜினியுடன் கைகோர்க்கிறார். இசைக்கு ‘ஆஸ்கர் புகழ்’ ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு நீரவ் ஷா, கலை இயக்கத்துக்கு முத்துராஜ், விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஸ்ரீனிவாஸ் மோகன், ஒலிப்பதிவுக்கு ‘ஆஸ்கர் புகழ்’ ரசூல் பூக்குட்டி, எடிட்டிங்கிற்கு ஆண்டனி என உச்சபட்ச டெக்னீஷியன்கள் ‘எந்திரன் 2’வை உருவாக்குவதில் பங்குகொள்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

ஜுராசிக் பார்க், அவெஞ்சர்ஸ், அயன் மேன் படங்களில் பணியாற்றிய ‘லீகஸி எஃபெக்ட்ஸ்’ (Legacy Effects from USA) நிறுவனம் ‘எந்திரன் 2’வை 3டியில் உருவாக்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த இந்நிறுவனம், இன்றைய தேதியில் 3டியில் படம்பிடிக்கும் நிறுவனங்களில் உலகின் முதல்தர பட்டியலில் இடம்பெற்றுள்ளதாம். அதேபோல் பிரத்யேக உடை வடிவமைப்பிற்காக ட்ரான், வாட்ச்மேன் போன்ற ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த மேரி வோட் ( Mary.E.Vogt (Quantm Effects)) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘டிரான்ஸ்ஃபார்மர்’ படங்களுக்கு ஆக்ஷன் இயக்குனராகப் பணியாற்றிய கென்னி பேட்ஸ் (Kenny Bates) ‘எந்திரன் 2’விற்கும் சண்டை இயக்கத்தை கவனிக்கிறார். அதேபோல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக ஹாலிவுட்டிலிருந்துJohn Huges ( Life of Pi ), Walt (Taufilms) ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

‘எந்திரன் 2’வின் நட்சத்திரப் பட்டியலையும், டெக்னீஷியன் பட்டியலையும் பார்த்தால் இப்படத்தின் பட்ஜெட் கண்டிப்பாக 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வெண்ணிலா கபட்டி குழு 2 ட்ரைலர்


;