40 மணி நேர தொடர் படப்பிடிப்பில் விஜய்யின் ‘தெறி’

40 மணி நேர தொடர் படப்பிடிப்பில் விஜய்யின் ‘தெறி’

செய்திகள் 22-Dec-2015 10:52 AM IST Chandru கருத்துக்கள்

திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்துவதில் கைதேர்ந்தவர் என தன் முதல் படத்திலேயே பெயரெடுத்தவர் இயக்குனர் அட்லி. விஜய்யை நாயகனாக வைத்து இவர் இயக்கி வரும் 2வது படைப்பான ‘தெறி’யை இந்த வாரத்திற்குள் முடிக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக சில நாட்களுக்கு தமிழ்த் திரையுலகே முடங்கிப்போனது. இந்நிலையில் இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளை தற்போது பரபரப்பாக படமாக்கிக் கொண்டிருக்கிறார் அட்லி.

ஒரு பெரிய தொழிற்சாலை செட்டில், ‘தெறி’ படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர் Kaloyan Vodenicharov அனல்பறக்க படமாக்கிக் கொண்டிருக்கிறாராம். தொடர்ந்து 40 மணி நேரம் இடைவிடாமல் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். இதுகுறித்த தகவலை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸும், இயக்குனர் அட்லியும் தங்களது சமூக வலைதள கணக்கில் பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;