தற்போது பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் ‘சில சமயங்களில்’ என்ற தமிழ் படத்தை இயக்கி வரும் ப்ரியதர்ஷன் அடுத்து மோகன்லாலை வைத்து ஒரு மலையாள படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்கவிருக்கிறார். மலையாளத்தில் நிறைய வெற்றிப் படங்களை வழங்கிய கூட்டணி மோகன்லால், ப்ரியதர்ஷசன் கூட்டணி! ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணையும் இப்படத்தில் மோகன்லால் கண்பார்வை இல்லாதவராக நடிக்கவிருக்கிறார். ஒரு கொலை குற்ற வழக்கில் நிரபராதியான மோகன்லால் மீது, ‘கொலைப் பழி’ விழுகிறது. அந்த கொலைப் பழியிலிருந்து தப்பிக்க உண்மையான கொலையாளியை கண்டு பிடிக்க களத்தில் இறங்கும் மோகன்லாலின் போராட்டங்கள் தான் இப்படத்தின் கதையாம்! ஏற்கெனவே ‘சிக்கார்’ என்ற மலையாள படத்தில் மோகன்லாலுடன் வில்லனாக மோதிய சமுத்திரகனி மீண்டும் இப்படத்தில் மோகன்லாலுடன் வில்லனாக மோதவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஃபிப்ரவரி முதல் வாரம் துவங்கவிருக்கிறது.
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம்...
கார்த்தி, ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தம்பி’. இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர்...
அறிமுக இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கும் படம் ‘வால்டர்’. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்...