புத்தாண்டுக்கு வெளியாகும் 5 தமிழ்ப்படங்கள்!

புத்தாண்டுக்கு வெளியாகும் 5 தமிழ்ப்படங்கள்!

செய்திகள் 23-Dec-2015 9:59 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையுமே சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருவிழா நாள்தான். அந்த வெள்ளிக்கிழமையோடு அரசு விடுமுறையாக இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்... புதுப்படங்கள் வரிசைகட்டி ரிலீஸாகும். அந்த வகையில், வரும் 2016ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்திருப்பதால் கோலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். செல்வராகவன் கதை, திரைக்கதை எழுதி அவரது மனைவி கீதாஞ்சலி இயக்கியிருக்கும் ‘மாலை நேரத்து மயக்கம்’ ஜனவரி 1ஆம் தேதி ரிலீஸ் என ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது இந்தப் படத்துடன் மேலும் 4 புதிய படங்கள் களமிறங்கவிருக்கின்றன.

கரையோரம், பேய்கள் ஜாக்கிரதை, தற்காப்பு, இதுதாண்டா போலீஸ் ஆகியவையே அந்த மீதி 4 படங்கள். 5 படங்கள் வெளியானாலும், இதில் செல்வராகவனின் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தையே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படம் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருப்பது கூடுதல் தகவல்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாலை நேரத்து மயக்கம் புதிய டீசர்


;